கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள முன்னாள் முதலமைச்சரும், மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்.

கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக காலமானார். ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி அச்சுதானந்தன் உயிரிழந்தார். 

கடந்த 1939 இல் மாநில காங்கிரஸ் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், 1940இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 1980 முதல் 1992 வரை சிபிஎம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகவும், 1996 முதல் 2000 வரை எல்டிஎஃப் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்தார். 

அதுமட்டுமின்றி கேரள சட்டமன்றத்தில் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக அச்சுதானந்தன் பணியாற்றினார். கடந்த 2006 - 2011 வரை முதலமைச்சராக இருந்த காலத்தில், ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டெடுத்தல், லாட்டரி மாஃபியாவுக்கு எதிரான உயர்மட்ட பிரச்சாரம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

தனது அரசியல் வாழ்க்கையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் மற்றும் நான்கரை ஆண்டுகள் தலைமறைவாக வாழ்வது உட்பட குறிப்பிடத்தக்க தனிப்பட்ட தியாகங்களைச் செய்த அவர், இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

Night
Day