எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டியாபுரம் நாரணாபுரத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த 6 அறைகளும் தரைமட்டமாகின. வெடிவிபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் உடடினயாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேறு யாரேனும் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள் என தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.