கேரளா : பட்டாசு சத்தத்தால் யானைகள் மிரண்டு ஓடிய காட்சிகள்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் ஆனக்குளத்தல் பட்டாசு சத்தத்திற்கு பயந்து யானைக்கூட்டம்  பதறியடித்து ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

இடுக்கி மாவட்டம் மண்குளம் வனச்சரககத்திற்குட்பட்ட ஆனக்குளம் பகுதியில் உள்ள நீர்நிலையில் யானைக்கூட்டம் ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது, மறு கரையில் ஆலயத்திருவிழாவின் போது வைக்கபட்ட பட்டாசு சத்தத்தால் மிரண்ட யானைகள் தண்ணீர் குடிக்காமல் பயத்தில் காட்டிற்கு ஓடின. இதனை சிலர் செல்போனில் படம் பிடித்த நிலையல் அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day