கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் அதிகரிப்பு - ஒருவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 

கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கேரளா - தமிழக எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரபடுத்தப்படுத்தியுள்ளனர். 

கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கவும், நோய் அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Night
Day