கடித்து குதறிய தெருநாய் - படுகாயமடைந்த சிறுவனுக்கு 40 தையல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிறுவனை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெலமங்கலம் அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் - மம்தா தம்பதியின் 2வது மகன் ராம்சரண், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அருகில் உள்ள கோழி பண்ணையில் இருந்த வந்த தெருநாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு 40 தையல் போடப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். 

தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதாகவும், சாலையில் செல்வோரை தெருநாய்கள் துரத்துவதால் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ள கிராம மக்கள், சாலையில் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day