ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிய ஹேமராஜ் குற்றவாளி

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது. அறிவிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய வழக்கில் கே.வி. குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஹேமராஜ் குற்றவாளி என நீதிபதி மீனா குமாரி தீர்ப்பளித்துள்ளார். மேலும், அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Night
Day