எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை ஆட்சியரத்தில் இருந்து குரூப்-4 தேர்வுக்கான வினாத்தாள்கள், போதிய பாதுகாப்பு இன்றி தனியார் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் TNPSC தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை ஆட்சியரத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்களை பாதுகாப்பாக கதவு மூடப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லாமல், தனியார் பேருந்தில் எடுத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது வாகனத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலம் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, தனியார் பேருந்து கதவு மற்றும் அவசர வழி கதவுகளில் சீல் வைக்காமல், A4 பேப்பரை மட்டும் ஒட்டி விட்டு பாதுகாப்பு என கூறி வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பின்றி குரூப்-4 வினாத்தாள்களை அனுப்பி வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.