கெஜ்ரிவால் கைது - டெல்லியில் தொடரும் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நடைபாதை பாலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்‍கில் மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்‍கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ‍காவலில் வைக்‍கப்பட்டார். இந்த கைதை கண்டித்து ​ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ. நடைபாதை மேம்பாலத்தில் படுத்து முழக்‍கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

varient
Night
Day