குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், அவரது வாழ்க்கை மற்றும் தலைமை கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொது சேவை, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய மேம்பாடு ஆகியவற்றிற்கான அவருடைய அர்ப்பணிப்பு ஒவ்வொருவரின் நம்பிக்கை மற்றும் வலிமையின் ஒளி என்று பிரதமர் பதிவிட்டுள்ளார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்க  எப்போதும் பாடுபட்டு வரும் குடியரசுத் தலைவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசீர்வதிக்கப்படுவார் என்று வாழ்த்தியுள்ளார்.

Night
Day