கருப்பு பெட்டியின் தரவுகள் பதிவிறக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து விசாரணையில் முக்கிய திருப்பமாக கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்கப்பட்டு பதிவுறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம், மேலெழும்பிய சில விநாடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தின் அருகில் இருந்து மருத்துவக் கல்லூரியின் உணவு விடுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உள்பட 270க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மரபணு பரிசோதனை மூலம் இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பமாக மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டி தரவுகள் டெல்லியில் உள்ள விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் மீட்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது என்று தெரிவித்துள்ளது. 

விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் விமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால விபத்துக்களை தடுப்பதற்கும் தேவையான காரணிகளை கண்டறிய இந்த முயற்சிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day