ஓபிசி என்ற அடையாளத்தை அழிக்க துடிக்கிறது காங்கிரஸ் - நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ஏடிஎம்களான மாறி விடுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி விதர்பா மாவட்டம் அகோலாவில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி என்றால் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அர்த்தம் என்றார். இன்றைய நவம்பர் 9 தேதி மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது எனக் கூறிய அவர் 2019-ம் ஆண்டு இந்த நாளில்தான் உச்ச நீதிமன்றம் ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை வழங்கியதாக குறிப்பிட்டார். அப்போது எழுந்த தேச உணர்வுதான் இந்தியாவின் பெரும் பலம் எனக் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உறுதியாக நிற்பதாகவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

varient
Night
Day