எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தால், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் தங்களின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தங்களின் விநியோக வழித்தடங்கள் சீராக இயங்குவதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Night
Day