இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது உறுதி - பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாரம் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் அளவிற்கு இந்தியா வளர வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்த தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் மத்தியமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3ஐ வெற்றிகரமாகச் தரையிறக்கிய ஒரே நாடு இந்தியா தான் எனவும், சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிட்டது பிரதமர் மோடி தான் எனவும் கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தியரை அனுப்ப வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தான் வழங்கினார் என கூறிய நாராயணன், அவரது தொலைநோக்குப் பார்வையே வெற்றிக்கு வழிவகுத்ததாக கூறினார்.

Night
Day