இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததையடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடி பாஜக ஆட்சி மன்றக் குழு தேர்வு செய்து அறிவித்தது. இந்நிலையில் தங்கள் தரப்பு வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, பி.சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவித்தார். வரும் 21-ஆம் தேதி சுதர்சன் ரெட்டி தங்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்றும் கார்கே தெரிவித்தார்.

Night
Day