இந்தியாவும், மொரிஷியசும் வெறும் கூட்டாளிகள் மட்டுமல்ல, ஒரு குடும்பம் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவும் மொரிஷியஸும் வெறும் கூட்டாளிகள் மட்டுமல்ல, ஒரு குடும்பம் என்று சொல்வதில் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா - மொரிஷியஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, மொரிஷியசுடன் இந்தியா நம்பகமான மற்றும் முதன்மை பங்காளியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் எரிசக்தி பாதுகாப்பு இருதரப்பு உறவின் முக்கிய தூண் என்றும் குறிப்பிட்டார். ஐஐடி மெட்ராஸ் மற்றும் இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் மொரிஷியஸ் பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் இருதரப்பு ஒத்துழைப்பை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பின்னர் பேசிய மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரிசியசின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இந்தியா துணை நின்று வருவதாக கூறினார். சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் தாராளமான உதவி மற்றும் நிபுணத்துவத்தால் மொரிசியஸ் பயனடைந்துள்ளதாக கூறிய மொரிஷியஸ் பிரதமர், இந்தியாவின் ஆதரவு மொரிஷியசின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். 

Night
Day