ஆம்புலன்சில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பீகாரில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 24ம் தேதி கயா மாவட்டத்தில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. உடற்தகுதி பரிசோதனையின் போது, முகாமில் பங்கேற்ற பெண் ஒருவர் மயக்கமடைந்துள்ளார்.  அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. லேசான மயக்க நிலையில் இருந்த தன்னை, ஆம்புலன்ஸுக்குள் இருந்த 3 முதல் 4 நபர்களால், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவு அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் ஆம்புலன்சில் இருந்த அஜித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Night
Day