ஆந்திர சட்டமன்ற தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் பாலகிருஷ்ணா - ரூ.81 கோடி சொத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு 81 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள இந்துபுரம் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு இந்துபுரத்தில் தன்னுடைய வேட்புமனுவை அவர் இன்று தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள சொத்து விபர பட்டியலில் தனது பெயரில் 81 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், மனைவி வசுந்தரா பெயரில் 140 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், மகன் மோக்சன்ஜா பெயரில் 58 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Night
Day