மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, வானகிரி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகள் மற்றும் அதிவேக இயந்திரப் படகுகளை தடை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி  ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு  சில மீனவ கிராம மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டை மடி வலை, அதிவேக இயந்திர விசைப்படகு ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தரங்கம்பாடி மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் படகுகளிலும் கைகளிலும் கருப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் வானகிரி மீனவர் கிராமத்திலும் 500க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளை ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக சென்று நாகை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Night
Day