ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை.யில் பெரியார் படம்... அத்தனையும் பொய்யா கோபால் (ஸ்டாலின்)...!

எழுத்தின் அளவு: அ+ அ-

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி, உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைகழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கப் போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிச்சென்ற நிலையில் திமுகவின் விளம்பர அட்ராசிடிகளில் இதுவும் ஒன்று என்ற தகவல் கசிந்திருக்கிறது.... இதன் பின்னணியில் இருப்பது என்ன பார்க்கலாம் விரிவாக...

பழங்குடி இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து பாரம்பரிய நடனம் ஆடி வாழ்த்து தெரிவித்ததாக வீடியோ வெளியிட்டு, இறுதியில் வாங்கிக்கட்டிக்கொண்ட கதை ஊரறிந்த ஒன்று..!

வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்த facts and perspectives என்ற நிறுவனம், ஆப்பிரிக்க வாழ்த்து வீடியோ குறித்த திமுகவின் தில்லுமுல்லை அம்பலப்படுத்தியிருந்தது... அதாவது கட்டணத்தின் பேரில், யாருக்கு வேண்டுமானாலும் வாழ்த்து சொல்லும் ஆப்பிரிக்க குழு மூலம், ஸ்டாலினை உலக தலைவர் என்ற ரேஞ்சுக்கு உயர்த்திக்காட்ட அக்கட்சியின் உடன்பிறப்புகள் செய்த காரியம் தான் அது, என்பது அம்பலப்பட்டதால் அசிங்கப்பட்டு போனது திமுக... இதை பார்த்த நெட்டிசன்கள், விளம்பர பைத்தியம் முத்தி போய் இருக்கு, விரைவில் சிகிச்சை எடுத்தால் குணமடைய வாய்ப்பு இருக்கு என கமெண்டுகளால் திமுகவை பின்னி பெடலெடுத்தது தனிக்கதை...

இந்தநிலையில் தான் லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபார்ட் பல்கலை கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்க போவதாக ஸ்டாலின் கூறிச்சென்றது தான்சானியா பழங்குடியின மக்கள் வாழ்த்து வீடியோவை போலவே, திமுகவின் விளம்பர அட்ராசிடிகளில் ஒன்று என்ற தகவல் வெளியாகியுள்ளது... அதாவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி சார்ந்த ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் உடல்பிறப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெறவுள்ள கருத்தரங்கு கூட்டத்தில், கலந்துக்கொள்ளும் விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பெரியாரின் புகைப்படத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் உண்மையில் ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைகழகத்தில், அப்பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படக்கூடிய விழா அது அல்ல எனவும் தகவல் வெளியாகியுள்ளது....

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அரங்குகளையும், திருமண மண்டபங்களையும் தனியார் அமைப்புகள் வாடகைக்கு எடுத்து விழா நடத்துவது போல, ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைகழகம் சார்ந்த இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் நடத்தப்படும் தனியார் அமைப்பால் நடத்தப்படும், கருத்தரங்கின் ஒருபகுதியாகவே பெரியாரின் புகைப்படத்தை திறந்து வைக்கிறாராம் விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின்... கருத்தரங்குகள் நடத்துவதற்கென்றே ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைகழகம் சார்பில் வாடகைக்கு விடப்படும் அறைகளில் ஒன்றை, வாடகைக்கு எடுத்து இப்படியொரு ஏற்பாட்டை திமுகவின் உடன்பிறப்புகள் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்ஃபார்ட் பல்கலைகழகத்திலேயே தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ளதாக ஸ்டாலின் கூறிச்சென்ற நிலையில் உண்மை வேறாக இருப்பது... ஸ்டாலினை உலக தலைவர்கள் ரேஞ்சுக்கு உயர்த்திக்காட்ட, துடிக்கும் உடன்பிறப்புகளின் முயற்சி, மீண்டுமொறுமுறை FAILURE-ஆகி இருப்பது... SO SAD என்ற ரீதியில் பரிதாபத்துக்குறியதாக மாறியுள்ளது... 

Night
Day