இந்தியா
மேம்பாலம் இடிந்து 10 பேர் பலி - பிரதமர் இரங்கல்
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது திகார் சிறையில் உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் பரிசீலனை செய்யப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...