அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி அங்கித் திவாரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூல வழக்குடன் சேர்த்து ஜாமீன் கோரிய வழக்கும் விசாரிக்கப்படும் என கூறிய நீதிபதிகள், வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீது கூடுதல் மனு, பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றால், அவற்றையும் தாக்கல் செய்யலாம் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர். 

Night
Day