இந்தியா
ராகுல்காந்தியுடன் பைக்கில் சென்ற பிரியங்கா காந்தி
பீகார் மாநிலத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாக்காளர?...
ராமர் கோவில் கும்பாபிஷேகம், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் வரும் 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் என ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. தற்போது கும்பாபிஷேக விழா, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 9 ஆயிரம் திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாக்காளர?...
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் திருப்பூரில் மாதம?...