எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிகானீரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
திட்டத்தை துவங்கி வைத்த பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு
தகுந்த பதிலடி கொடுத்து இருப்பதாக கூறினார். பாகிஸ்தானுடன் வர்த்தகமும், பேச்சுவார்த்தையும் இல்லை என அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் பேச்சுவார்த்தை இருக்கும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்றார். அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை என தெரிவித்த அவர், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் முகமூடியை கிழித்து காட்ட உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.