அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத்தின் 110-வது நிகழ்ச்சியாக நேற்று வானொலியில் உரையாற்றிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான சூழல் உருவாகி உள்ளதாகவும் மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 110 நிகழ்ச்சிகளில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் பற்றி மக்களுடன் பேசியது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், இது மக்களால் மக்களுக்காக, மக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட திட்டம் என நெகிழ்ச்சி தெரிவித்த அவர் மக்களவைத் தேர்தலையொட்டிஅரசியல் சட்டத்தைப் பின்பற்றி அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாது எனத் தெரிவித்தார்.

Night
Day