ஃபாஸ்ட் டேக் கார்டுகளை கேஒய்சி பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் கேஒய்சி பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்வதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் கேஒய்சி பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேஒய்சி பதிவு செய்யப்படாத கார்டுகள் நாளை முதல் பிளாக் லிஸ்ட் செய்யப்படும் என்றும், முற்றிலும் செயல் இழக்கம் செய்யப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. கேஒய்சி பதிவு செய்யாதவர்கள் www.ihmcl.co.in என்ற இணையதளத்தில் அடையாள அட்டைகளை கொண்டு புதுப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day