"கிரிக்கெட் பார்த்துக்கொண்டே ரயில் ஓட்டியதால் விபத்து" - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் கடந்த அக்டோபர் மாதம் ராயகடா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு ரயிலின் ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் மேட்ச்சை பார்த்துக்கொண்டிருந்தது தான் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அருகே பலாசா பயணிகள் ரயில் மீது ராயகடா பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 14 பயணிகள் பலியானதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில் ராயகடா பயணிகள் ரயிலின் ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் மேட்ச் நேரடி ஒளிபரப்பை பார்த்து கொண்டிருந்ததுதான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து ஓட்டுநர்கள் ரயிலை ஓட்டும்போது கவனம் முழுவதும் ரயில் பயணித்திலேயே இருக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Night
Day