"கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது" - கிரிக்கெட் வீரர் நடராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, அவர் பயின்ற ஏவிஎஸ் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நடராஜன், தான் கடந்து வந்த பாதைகளை வைத்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர் முயற்சியை மனம் தளராமல் மேற்கொள்ளும்போது நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்றும், கடின உழைப்பு இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்றும் நடராஜன் கூறினார். தற்போது, அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

varient
Night
Day