எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் பல்வேறு பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர்.
மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள இந்திய ராணுவ தளத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கும், ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு ஷாஷ்டிரா பூஜை செய்து வழிபட்டார். மேலும் இந்திய வீரர்களுக்கு குங்குமம் வைத்து விஜயதசமி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் அவமரியாதை ஏற்படும் போது மட்டமே இந்தியா போர் நடத்தியிருப்பதாக தெரிவித்தார். எந்த நாடும் தர்மம், உண்மை மற்றும் மனித மதிப்பீடுகளுக்கு எதிராகப் போரைத் தொடங்கும் போது மட்டுமே இந்தியா போரிட்டுள்ளது என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.