"ஆபரேஷன் சிந்தூர்" - பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி துவம்சம் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் பஹல்காம் சம்பவத்துக்கு நீதிநிலை நாட்டப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதே நேரம் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், இந்த தாக்குதல் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. 


Night
Day