கவுண்டமணி மனைவியின் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் மனைவி சாந்தி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, சாந்தியின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்த பிறகு நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Night
Day