ஹஜ் புனித யாத்ரீகர்களை வழி அனுப்பும் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து முதல் குழுவாக இஸ்லாமியர்கள் சுமார் 150 பேர் தனியார் நிறுவனம் மூலம் நாளை புறப்பட உள்ளனர். இந்நிகழ்வை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் ஹஜ் புனித யாத்திரிகர்களை வழி அனுப்பும் விழா மற்றும் ஹஜ் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.பி அப்துர் ரஹ்மான், எம்.பி. நவாஸ் கனி, எம்எல்ஏ அப்துல் சமது, வீ. க. தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 
75 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் அரசு மூலமாகவும் 35 ஆயிரம் பேர் தனியார் நிறுவனம் மூலமாகவும் அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தனர். 

Night
Day