விழுப்புரம்: திரௌபதி அம்மன் கோயிலில் தேரை தோளில் தூக்கி செல்லும் வினோத திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திரெளபதி அம்மன் கோயிலில் 16 டன் எடை கொண்ட 32 அடி உயர தேரை தோளில் தூக்கி செல்லும் வினோத திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணர், அர்ஜூனர் மற்றும் திரெளபதி அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 32 அடி உயர தேரில் கிருஷ்ணர், அர்ஜுனருடன் திரெளபதி அம்மன் எழுந்தருள 400 பேர் தோள்களில் சுமந்தபடி வீதியுலா வரும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day