விநாயகர் சதுர்த்தி திருநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளினை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், தனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று, அனைவரும் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, அரளி மலர் மாலைகள் அணிவித்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து, பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

"கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை; கணபதி என்றிடக் காலனும் கைதொழும்; 
கணபதி என்றிடல் கருமம் ஆதலால்; கணபதி என்றிடக் கவலை தீருமே''என்ற திருமந்திரத்தில், 

கணபதியை வணங்கி புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி திருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

பிரணவப் பொருளாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமான், அவதரித்த இந்நன்னாளில் தமிழ்நாட்டில் இருளகன்று ஒளி வீச, விவசாய மகசூல் பெருக, அராஜகம் அழிய, அமைதி தவழ, அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் வாழ, மக்களாட்சி மலரவேண்டுமென்று விநாயகப் பெருமானை பிரார்த்திப்பதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை சின்னமாம் தும்பிக்கை நாயகனின் அருளால், வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும்
என புரட்சித்தாய் சின்னம்மா தெரி​வித்துள்ளார். 

வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

varient
Night
Day