வாராகி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி விழா!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள வாராகி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day