வள்ளலார் இடத்தில் சர்வதேச மையம் - பாமக எதிர்ப்பது ஏன்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்... வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச மைய கட்டடம் கட்டுவதற்கு பதில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு அங்கு வள்ளலார் சர்வதேச மையத்தை கட்டவேண்டும் என பா.ம.க.வினர் வலியுறுத்தினர்.

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபை அமைந்துள்ளது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர் ஆவார்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று புகழப்படும் வள்ளலார், ஆன்மீகத்தின் மீது பற்று ஏற்பட்டு தவநெறியுடன் வாழ்ந்து மக்களுக்கு நல்ல சிந்தனைகளை வழங்கி வந்தார்.

புலால் உண்ணாமல் சைவ வாழ்க்கையில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கிய வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்கள் தானமாக அளித்த நிலத்தில் சத்திய ஞான சபையை நிறுவினார்...

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், நாள்தோறும் மக்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்... வள்ளலார் சத்திய ஞானசபையில் முக்கிய நிகழ்ச்சியாக தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்...

இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சமரச சன்மார்க்க தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜோதி தரிசனத்தை கண்டு மகிழ்வர்...

இந்நிலையில் வள்ளலாரின் புகழை போற்றும் வகையில் வடலூர் சத்திய ஞான சபையில், சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது...

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சத்திய ஞான சபை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடலூர் பேருந்து நிலையம் அருகே ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் வடலூரில் குவிக்கப்பட்டனர்.

சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கூடாது என்று முழக்கமிட்ட பா.ம.க.வினர், வள்ளலார் சத்திய ஞான சபைக்கான பல்வேறு இடங்கள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அந்த இடங்களை மீட்டு அங்கு வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்..

கடந்த சில ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Night
Day