தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாள் - புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில், முன்னாள் தலைமை அரசு கொறடா பி.எம் நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் மற்றும் திண்டிவனம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர், பூந்தமல்லி நகர கழக செயலாளர் கந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழக நிர்வாகிகள், தன்னுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை ஏழை மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தவர் கேப்டன் விஜயகாந்த் என புகழாரம் சூட்டினர்.


Night
Day