ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி மலையில் ஏழுமலையானின் ஏழு வாகன புறப்பாடு கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி மலையில், ஏழுமலையானின் ஏழு வாகன புறப்பாடுகளும் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியும் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ரத சப்தமியை முன்னிட்டு, முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் சூரிய பிரபை வாகனம், சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது.​இதனைத் தொடர்ந்து திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதன்பின்னர் ஐந்தாவது வாகன புறப்பாடாக கற்பக விருட்ச வாகன புறப்பாடும், ஆறாவதாக சர்வ பூபாலா வாகன புறப்பாடும், நிறைவு வாகன புறப்பாடாக ஏழுமலையானின் சந்திர பிரபை வாகன புறப்பாடும் நடைபெற்றன. மாட வீதிகளில் வலம் வந்த உற்சவர் மலையப்ப சாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.

Night
Day