டெல்லி: சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜாகிரா மேம்பாலம் அருகே படேல் நகர்-தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day