மதுரை : மீனாட்சி - சுந்தரேஷ்வரர் திருக்கல்யாண முன்பதிவு துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண கட்டணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.


மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 11ம் தேதி முதல் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண கட்டணச்சீட்டு முன்பதிவு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்டணம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day