புதுக்கோட்டை: ஸ்ரீ பொன்னுங் குறுந்துடைய அய்யனார், ஸ்ரீ சின்னையா சாமி ஆலயங்களில் கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னுங் குறுந்துடைய அய்யனார், ஸ்ரீ சின்னையா சாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மங்கள இசை மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் புனித நீர் சிவாச்சாரியார்களால் சுமந்து வரப்பட்டு‌ கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

varient
Night
Day