புதுக்கோட்டையில் பிரமிக்க வைத்த நாடு செலுத்தும் திருவிழா...!

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலிலில், நாடு செலுத்தும் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு என்ன? பக்தர்கள் செலுத்தும் விநோத நேர்த்திக்கடன்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ராட்சத ஈட்டி, கோலாட்ட கம்புகளுடன் கோலாகலமாக நடைபெற்ற நாடு செலுத்தும் பொங்கல் விழாவின் பிரம்மாண்ட காட்சிகள் தான் இவை...

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளது இந்த பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி விழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் பூத்தட்டு ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து, கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் நாடு செலுத்தும் பொங்கல் திருவிழா தொடங்கியது. இந்த விழாவின் இறுதி நாளில் பக்தர்கள் ராட்சத ஈட்டியுடனும், கோலாட்ட கம்புகளுடன் கோலாட்டம் அடித்தவாறும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ஆண்களும் உடலில் சேற்றினை பூசிக் கொண்டு ஊர்வலமாக வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மேலும், பெரும்பான ஆண்கள் பெண்கள் வேடமணிந்து விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளான பொன்னமராவதி, ஆலவயல், செவலூர், செம்பூதி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் குவிந்த மக்கள் விழாவை கண்டு ரசித்ததோடு, முத்துமாரியம்மனையும் வழிபட்டு சென்றனர். 

Night
Day