நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 200 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாக பணிகளும், 100 கோடி ரூபாய் செலவில் அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகளும் நடந்து முடிந்துள்ளன. ராஜகோபுரம் கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் விமான கலசங்களில் தங்கத்தகடு பதிக்கும் பணி முடிந்து, வரும் 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகின்றன. 

Night
Day