தேர்த் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தேர்த் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை அருள்மிகு மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் பங்குனி மாத தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத நிகாில் முகில்வண்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். ரதவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோபாலா' என முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விரதமிருந்த பக்‍தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்‍கு வந்து நேர்த்திக்‍கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்‍தர்கள் எடுத்து வந்த பாலைக்‍கு கொண்டு அம்மனுக்‍கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் அமைந்துள்ள உஜ்ஜைனி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி 508 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் விரதமிருந்தமிருந்து பால்குடங்களை சுமந்தபடி கண்டமனூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவந்து கோவிலை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மாகாளி அம்மனுக்‍கு அபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்‍கப்பட்டது. விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்‍கள் கலந்து கொண்டு உஜ்ஜைனி மாகாளி அம்மனை தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் கிராமத்தில் அமைந்துள்ள தேவதுர்கை அம்மன்  ஆலயத்தில், உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் மிருத்தியுஞ்செய் ஆயுஷ் மஹா யாகம் நடைபெற்றது. பெரிய யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள், காய் மற்றும் பழங்களால் மஹா யாகம் நடத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட புனித நீரால் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Night
Day