திருப்பதி பிரம்மோற்சவம் - தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6வது நாளான இன்று தங்க ரதத்தில் உற்சவர் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விழாவின் 6வது நாளான இன்று காலை 8 மணிக்கு தங்க அனுமந்த வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடத்தப்பட்ட சமர்ப்பணங்களுக்கு பின் மலையப்ப சுவாமியின் அனுமந்த வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. மாடவீதிகளில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்க ரதத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் செய்யப்பட்டது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.

Night
Day