கரூர் பெருந்துயரம் - NDA சார்பில் உண்மை கண்டறியும் குழு

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 8 எம்.பி.க்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமாமாலினி தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த குழுவில், பாஜக எம்.பிக்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி புட்டா மகேஷ் குமார் ஆகிய 8 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு கரூர் துயர் சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day