திருப்பதியில் தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி அதற்கு வெளியே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் ஏழுமலையானை தரிசிக்க காத்திருக்கின்றனர். மேலும், தற்போது இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும் என்ற நிலை நிலவுகிறது. திருப்பதி மலையில் தங்கும் அறைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் ஏராளமான பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காமல் அவதியுற்றனர். 

Night
Day