தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் 15வது நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேருக்கு முன்னால் விநாயர் மற்றும் தெய்வானை உடனுறை சுப்ரமணியர் வீதிஉலா செல்ல, தேருக்கு பின்னால் நீலோத்பாலாம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஊர்வலமாக சென்றனர். மேலராஜ வீதியிலிருந்து நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்த தேரை மாவட்ட ஆட்சியர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Night
Day