தங்கக்குடையுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சுவாமி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று, உற்சவர் மலையப்ப சுவாமியின் தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு அதிகாலை கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி தங்கக்குடையுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணத்திற்கு பின் தொடங்கிய தேரோட்டம், கோவில் மாட வீதிகளில் கோலகலமாக சென்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day