சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம்... புதிய வரலாறு எழுதும் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். யார் இந்த சுபான்ஷூ சுக்லா விரிவாக பார்க்கலாம்..!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. அதன்படி வரும் 29ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் 3 பேரை ஏற்றிக்கொண்டு 'ஆக்ஸியம் ஸ்பேஸ் தனது நான்காவது பயணத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தொடங்க உள்ளது. இதனை மத்திய அரசும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு, ஏப்ரல் 3, ((Kazakh Soviet Socialist Republic)) கசாக் சோவியத் சோசலிஸ்ட் குடியரசின் அங்கமாக இருந்த பைகோனூர் காஸ்மோட்ரோம் என்ற விண்வெளி ஏவுதளத்தில் ((Baikonur Cosmodrome)) இருந்து ஏவப்பட்ட சோவியத் ராக்கெட்டான சோயுஸ் டி-11 விண்கலத்தில் பறந்து விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியக் குடிமகன் என்ற பெருமையை பெற்றார் ராகேஷ் சர்மா. அதன் பிறகு கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண்வெளிக்கு பயணப்பட இருக்கும் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் சுபான்ஷூ சுக்லா. அவரின் பயணத்தின் மூலம் தனது விண்வெளிப் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட அத்தியாயத்தை எழுதத் தயாராக உள்ளது இந்தியா.

1998ம் ஆண்டு கார்கில் போரின் போது இந்திய ஆயுதப் படையில் சேர வேண்டும் என்ற உத்வேகமே தற்போது சுபான்ஷு சுக்லா-வை சர்வதேச விண்வெளி வீரர் என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. 1985-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிறந்தார் சுபான்ஷூ சுக்லா. பள்ளிப்படிப்பிற்கு பின்னர், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய விமானப்படை அகாடமியில் பயின்று, இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார். அதன்பிறகு ​2006 ஜூன் 17 அன்று இந்திய விமானப்படையில் பைட்டர் பைலட்-ஆக சேர்ந்த சுபான்ஷூ சுக்லா-வுக்கு 2,000 மணி நேரத்திற்கும் மேலான விமான அனுபவம் உள்ளது. ​இந்திய விமானப்படையின் போர் விமானங்களான Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier 228 மற்றும் An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை அசால்ட்டாட இயக்குவதில் கில்லாடி. ​2019 ஆம் ஆண்டில், இஸ்ரோ அவரை விண்வெளி வீரர் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்தது.பின்னர் சுபான்ஷூ சுக்லா மாஸ்கோவின் ஸ்டார் சிட்டியில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பிரத்தியேக பயிற்சி பெற்றார் சுபான்ஷூ சுக்லா. இந்தநிலையில் தான் கடந்த 2024 ஆண்டு மார்ச் மாதத்தில் "குரூப் கேப்டனான புரோமோட் செய்யப்பட்டார் சுபான்ஷூ சுக்லா. 

நாசாவின் மூத்த விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையிலான சர்வதேச குழுவுடன் பயணப்பட இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் போலந்து விண்வெளி வீரர் ஸ்லோவோஸ் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகிய விண்வெளி வீரர்களும் பயணிக்க இருக்கின்றனர். முன்னாள் நாசா விண்வெளி வீரரும், ஆக்ஸியம் ஸ்பேஸில் விண்வெளிப்பயணத்தில் தற்போதைய இயக்குநருமான பெக்கி விட்சன் தான் 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' பயணத்தின் மிஷன் கமேண்டராக பணியாற்ற உள்ளார். இதில் போலந்தை சேர்ந்த விண்வெளி வீரரான ஸ்லோவோஸ் பணி நிபுணராகவும் ஹங்கேரி வீரரும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கான திட்ட விண்வெளி வீரருமான திபோர் கபு, மற்றோரு பணி நிபுணராக பணியாற்ற உள்ளது குறிப்பிடதக்கது.

வருகிற 29ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.33 மணிக்கு ஆக்ஸியம் மிஷன் 4-ன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் புறப்பட உள்ள நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருக்க போகும் சுபான்ஷு சுக்லா, சைனோபாக்டீரியாக்கள் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறார். 

Night
Day