ஐடி துறையில் ஜொலிக்க எது சிறந்தது... புரொபஷனல் கோர்ஸா! டிகிரி படிப்பா!

எழுத்தின் அளவு: அ+ அ-

சமீபகாலமாக தங்கள் விரும்பும் வேலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் படிக்கும் புரொபஷனல் கோர்ஸ்கள் எனப்படும் தொழில்முறை படிப்புகள் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 12 வகுப்பு முடித்தவுடன் டிகிரி படிப்புகளை படிக்காமல் நேரடியாக புரொபஷனல் கோர்ஸ்களை படிப்பதில் உள்ள நிறை குறைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலகம் முழுவதும் தொழில்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப வேலை வாய்ப்புக்களும் உருவாகி வருகின்றன. குறிப்பாக இந்தியா போன்ற அதிக தொழிலாளர்கள் உள்ள நாடுகளை கார்ப்ரேட் நிறுவனங்கள் குறிவைக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த இந்த வளர்ச்சி ஸ்கில்டு லேபர் என அழைக்கப்படும் திறன்வாய்ந்த தொழிலாளர்களின் தேவையை அதிகரிக்க செய்துள்ளது.

ஐடி துறையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் 6 மாதம் அல்லது 1 வருடம் கோடிங், டேட்டா மேனேஜ்மண்ட் போன்ற பயிற்சிகளை முடித்துவிட்டு பணியில் சேர்ந்து விடுகின்றனர். 

டெஸ்லா செயல் தலைவரான எலான் மஸ்க் முதல் உலகின் முக்கிய தொழில் அதிபர்கள் வரை எதிர்காலங்களில் டிகிரி படிப்புகளின் தேவை இல்லாமல் மாறிவிடும் என்றும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு எந்த திறன் வாய்ந்த ஊழியர்கள் தேவையோ அவர்களை மட்டும் எடுத்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு டிகிரி படிப்பு உள்ளாதா என்பதை எல்லாம் பார்க்க மாட்டார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க , புதிய டிரெண்ட் புரொபஷனல் கோர்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, ஒரு துறையை பற்றி ஆழமான அறிவு வேண்டும் என்றால் அந்த துறையில் டிகிரி முடிப்பது கட்டாயம் என்றும் அப்போதுதான் அந்த துறையில் புதிய கண்டுபிடிப்புகளை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு துறையில் ஒரு திறனுக்கு அதிக தேவை இருக்கலாம்,  ஆனால் எதிர் காலத்தில் அந்த திறனுக்கான தேவை இல்லாத நிலை ஏற்பட்டால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் எனவே, டிகிரி முடிப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி மற்றும் செயற்கை தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தற்போது ஏற்பட்டுள்ள காலியிடங்களை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் புரொப்ஷ்னல் கோர்ஸ்கள்  படித்த மாணவர்கள் வேலைக்கு எடுத்தாலும், தொலைநோக்கு பார்வைவையோடு அனுகும்போது,  ஒரு துறையில் நிபுணத்துவம் பெறவேண்டும் என்றால் அதில் டிகிரி படிப்பதே சிறந்தது என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாக உள்ளது.

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் கமலுடன் செய்தியாளர் செல்வசூரியன்.

Night
Day